பொலிக! பொலிக! 101

ஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே விளக்கொளியிலும் மங்கல வாத்திய அணிவகுப்புகளிலும் வாண வேடிக்கைகளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. பஞ்ச நாராயணர்களின் கோயில்களிலும் ஒரே முகூர்த்தத்தில் விக்கிரகப் பிரதிஷ்டைக்குத் திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். பொறுப்பு முதலியாண்டானிடம் தரப்பட்டிருந்தது. முன்னதாக அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் ராமானுஜருக்கு நூறு வயது நிறைந்திருந்தது. தொண்ணூறு நிறைந்திருந்த முதலியாண்டான்தான் அந்நாளையும் திருவிழாவாக்கிக் கொண்டாடினார். ‘முதலியாண்டான்! நமக்கு இதனைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி, பேலூரைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அனைத்து சமணர்களையும் நீர் … Continue reading பொலிக! பொலிக! 101